tamilnadu

img

புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை

கொல்கத்தா:
உடல்நலம் குன்றிசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நலம் சற்று தேறி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பினார். வீட்டிலிருந்தபடி அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.  

புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த வெள்ளிக்கிழமையன்று மூச்சுத்திணறலால் மிகவும் சிரமப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் மருத்துவருமான ஃபாடு ஹலீம் அறி வுரையின்பேரில் அவர் உடனடியாக  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். மாநில செயலாளர் சூர்யகாந்த மிஸ்ரா மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் முதலானவர்கள் அருகில் இருந்து அவரது உடல்நலம் குறித்து கவனித்து வந்தார்கள்.புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருக்கும் செய்தி யறிந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மருத்துவமனையை நோக்கித் திரண்டு வந்தார்கள்.திங்கள் கிழமையன்று காலை 11 மணியளவில் மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலம் நன்கு தேறி மூச்சுவிடுகிறார் என்றும், நிம்மதியாகத் தூங்குகிறார் என்றும், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு  சீராகிவிட்டது என்றும் எனினும் மேலும் சில தினங்களுக்கு மருத்துவர்களின் கவனம் தேவைப்படுகிறது என்றும்குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கள் மதியம் 2.45 மணியளவில் மருத்துவமனையிலிருந்து அவருடையஇல்லத்திற்குத் திரும்பியுள்ளார்.அவரது உடல்நலம் குறித்து டாக்டர் ஃபாடுஹலீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா வீட்டில் தங்கவைக்கப்பட்டு மேலும் சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று கூறினார்.

கொல்கத்தாவிலிருந்து சந்தீப் சக்ரவர்த்தி....

;